யம்மியான “ஆம்லெட் கிரேவி” ரெசிபி – ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க!!

0

அனைவரும் பொதுவாக விரும்புவது முட்டையை தான். ஆனால், ஒரே போல் முட்டையை ஆம்லெட் மட்டும் செய்து சாப்பிடுவது யாருக்குமே பிடிக்காது. இதனால் இன்று சற்று வித்தியாசமான “ஆம்லெட் கிரேவி” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • முட்டை – 4
  • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 3
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்
  • வெண்ணை – 2 டீஸ்பூன்
  • இஞ்சி & பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • புதினா – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில், தோசை கல்லை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெறும் முட்டையினை கலக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், அதனை ஆம்லெட் போன்று எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதனை ஓரளவிற்கு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ள வேண்டும்.வேறு ஒரு சட்டியினை காய வைத்து அதில் வெண்ணை ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி சேர்க்க வேண்டும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் மகளா இது?? எப்படி இருக்காங்கன்னு பாருங்களே!!

அதனை நன்றாக கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அதில் இஞ்சி & பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பச்சை வாசனை போகும் வரை நன்றாக கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், இதில் உப்பு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து கிண்டி விட வேண்டும். இதில் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். கொதித்ததும் அதில் எடுத்து வாய்த்த முட்டையினை போட்டு பிரட்டி எடுக்கவும். அவ்ளோ தான்!!

சூடான & சுவையான “ஆம்லெட் கிரேவி” தயார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here