வித்தியாசமாக டேஸ்டில் “முட்டை மஞ்சுரியன்” – செஞ்சு அசத்துங்க!!

0

நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் முட்டையில் புரதசத்து, உடல் வலுவினை ஏற்படுத்தும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரே போலவே முட்டை பொரியல், முட்டை குழம்பு வைத்து சாப்பிடாமல் இன்று சற்று வித்தியாசமாக “முட்டை மஞ்சுரியன்” ரெசிபி செய்முறை குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • முட்டை – 4
  • மிளகு தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – 2 டீஸ்பூன்
  • சோள மாவு – 2 டீஸ்பூன்
  • மைதா மாவு – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • இஞ்சி – 2 (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு – 3 (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • குடை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
  • சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்
  • சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில், ஒரு பாத்திரத்தில் முட்டை, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிண்டி கொள்ளவும். பின், ஒரு சிறு பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து கொள்ள வேண்டும். அதில், எடுத்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கொள்ள வேண்டும். இதனை இட்லி சட்டியில் வைத்து வெந்ததும், எடுத்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின், ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிண்டி கொள்ள வேண்டும்.

தமிழில் புதிய கல்வி கொள்கை – பலத்த எதிர்ப்பிற்கு பின்பு வெளியீடு!!

இதில் எடுத்து வைத்துள்ள முட்டை துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டி விட்டு எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும். பின், ஒரு காடையை காய வைத்து அதில் எண்ணெய் சேர்த்து இஞ்சி, பூண்டு சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கியதும் அதில் வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கலவை நன்றாக வதங்கியதும், இதில் எடுத்து வைத்துள்ள அனைத்து சாஸ்களையும் சேர்க்க வேண்டும். மஞ்சுரியன் கிரேவியாக வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கிண்டி அதனை இந்த கலவையில் சேர்க்க வேண்டும். பின், கடைசியாக இதில் முட்டை துண்டுகளை சேர்க்க வேண்டும். மசாலா படும் வரை நன்றாக கிண்டி விட்டு இறக்கி விட வேண்டும். அவ்ளோ தான்!!

வித்தியாசமாக டேஸ்டில் “முட்டை மஞ்சுரியன்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here