நாவூறும் சுவையில் “முட்டை கைமா” ரெசிபி – ஒரு தடவ செஞ்சு பாருங்க!!

0

சைவம் மற்றும் அசைவம் பிடிக்கும் அனைவருக்கும் முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இன்று முட்டையினை வைத்து செய்ய கூடிய “முட்டை கைமா” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • முட்டை – 6
  • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 4
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • இஞ்சி & பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி & கருவேப்பில்லை – தேவையான அளவு

செய்முறை

முதலில், முட்டையினை எடுத்து அதனை வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும், முட்டையினை எடுத்து சிறு சிறு துண்டுகளாக சீவி கொள்ள வேண்டும். அதன் பிறகு, ஒரு சட்டியினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் எடுத்து வைத்துள்ள வெங்காயத்தினை போட்டு வதக்க வேண்டும். பின், அதில் இஞ்சி & பூண்டு விழுது, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

நயன்தாராவுக்கு பிரபல சீரியல் நடிகருடன் இப்படி ஒரு கனெக்சனா?? இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

இந்த கலவை நன்றாக வதங்கியதும் அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி விட வேண்டும். இதில் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இந்த கலவை தண்ணீர் வற்றி சுருண்டு வந்ததும் இதில் எடுத்து வைத்துள்ள முட்டையினை சேர்க்க வேண்டும். கடைசியாக, இதில் கருவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். இதனை ரொட்டி அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அவ்ளோ தான்!!

சுவையான “முட்டை கைமா” ரெசிபி தயார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here