Thursday, April 25, 2024

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை – மக்களுக்கு மேலும் அவதியா??

Must Read

தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் முதல் அரசு நியாய விலை கடைகளில் புதிய அறிமுகமாக “பயோமெட்ரிக்” முறை கொண்டு வரப்பட உள்ளது. இதனால் அட்டை வைத்திருப்பவர் மட்டுமே நியாய விலை கடைக்கு வந்து பொருட்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

“புதிய பயோமெட்ரிக் முறை”

நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனுக்காக அரசு சார்பில் நியாய விலை கடை எனப்படும் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதில் மற்ற தனியார் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை விட குறைவாக தான் இருக்கும். அதனால் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரேஷன் கடைகளில் தான் பொருட்கள் வாங்குவர். இந்த முறையில் ஒவ்வொரு குடும்பத்தின் தேவையினை பொறுத்து பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. கடைகளுக்கு பொருட்களை வாங்க வேண்டும் என்றால் அட்டையினை யார் வேண்டுமானாலும் எடுத்து சென்று பொருட்களை வாங்கலாம்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் பல குளறுபடிகள் நடந்தன. அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பொருட்களை பெருகின்றனரா?? என்ற சந்தேகம் எழுந்தது. அட்டையில் இருப்பவருக்கும் பொருட்களை வாங்குபவருக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அதே போல் பலரது குடும்ப அட்டைகளை வைத்து உணவக உரிமையாளர்கள் பொருட்களை வாங்குகின்றனர் என்ற புகார் எழுந்தது.

நடைமுறையில் அமல்:

இதனை தவிர்க்கும் பொருட்டு புதிய முறையான “பயோமெட்ரிக்” முறை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமலுக்கு வர உள்ளது. இதில் அட்டைதாரரின் கைரேகையை வைத்து தான் பொருட்களை வாங்க முடியும். அவர்கள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் கடைக்கு வந்து பொருட்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுவையான ‘சைவ மட்டன் கிரேவி’ ரெசிபி – வீட்டில் செஞ்சு அசத்துங்க!!

biometry system soon to been launched
bio-metric system soon to been launched

இந்த புதிய முறையில் நிறைய பலன்கள் இருந்தாலும், மக்கள் அதிகமான தவிப்புக்கு ஆளாக நேரிடும். அட்டையை வைத்திருக்கும் முதியவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலம் குன்றியோர் மிகுந்த பாதிப்பு அடைவர். இதனால் இந்த முறையால் மக்கள் கடும் அதிருப்தி அடைத்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -