உங்க கூந்தல் முட்டியை தொட இந்த ஒரு பொருள் போதும்.., எளிமையான டிப்ஸ் இதோ!!

0
உங்க கூந்தல் முட்டியை தொட இந்த ஒரு பொருள் போதும்.., எளிமையான டிப்ஸ் இதோ!!
உங்க கூந்தல் முட்டியை தொட இந்த ஒரு பொருள் போதும்.., எளிமையான டிப்ஸ் இதோ!!

இதுவரை நம் முகத்தின் அழகை அதிகரிக்க ரோஜா இதழ்களை பயன்படுத்தி இருப்போம். ஆனால் இந்த ரோஜாவை பயன்படுத்தி நம் தலை முடியின் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • பன்னீர் ரோஜா பூ – 10
  • தயிர் – 1 கப்
  • தேன் – 3 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

செய்முறை விளக்கம்

ரோஜா ஹேர் பேக் செய்வதற்கு பத்து பன்னீர் ரோஜா பூக்களை எடுத்து அதன் இதழ்களை பிரித்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். அதன் பிறகு ஒரு கப் அளவு தயிர் 3 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் செக்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த ஹேர் பேக்கை நம் தலை முடியின் வேர்க்கால் முதல் தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு 30 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பு எதுவும் யூஸ் செய்யாமல் வாஷ் செய்து கொள்ளவும். மேலும் இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து நாம் பாலோ செய்து வருவதன் மூலம் நம் தலை முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here