
பொதுவாக நம் பெண்களுக்கு அடர்ச்சியாக நம் கூந்தல் வளர வேண்டும் என விருப்பப்படுவார்கள். அப்படி அவர்களின் விருப்பதை பூர்த்தி செய்யும் வகையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சூப்பரான ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தேவையான பொருட்கள்;
- தேங்காய் எண்ணெய் – 100 கிராம்
- ஆலிவ் ஆயில் – 100 கிராம்
- கற்றாழை ஜெல் – 25 கிராம்
- குடை ஆரஞ்சு தோல் – 100 கிராம்
செய்முறை விளக்கம்;
இந்த ஹேர் ஆயில் தயாரிப்பதற்கு 100 கிராம் ஆலிவ் ஆயில் மற்றும் 100 கிராம் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இதில் 100 கிராம் குடை ஆரஞ்சு பழத்தின் தோலை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
இந்த ஆயில் நன்றாக கொதித்த பிறகு இதோடு 25 கிராம் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளும். இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த ஹேர் ஆயிலை தினமும் தலையில் தேய்த்து வருவதன் மூலம் நம் தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.