உங்க முகம் பொலிவில்லாமல் என்னவோ போன்று இருக்கிறதா? அப்போ இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., செம்ம ரிசல்ட் கிடைக்கும்!!

0
உங்க முகம் பொலிவில்லாமல் என்னவோ போன்று இருக்கிறதா? அப்போ இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., செம்ம ரிசல்ட் கிடைக்கும்!!
உங்க முகம் பொலிவில்லாமல் என்னவோ போன்று இருக்கிறதா? அப்போ இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., செம்ம ரிசல்ட் கிடைக்கும்!!

சில நேரங்களில் நம்முடைய முகம் பொலிவிழந்து பருக்கள் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் இதற்காக கெமிக்கல் நிறைந்த பேஸ் க்ரீம்களை முகத்தில் அப்ளை செய்து வருகிறோம். ஆனால் இதற்கு இனி அவசியமே இருக்காது. ஏனென்றால் வீட்டில் இருக்கும் உளுந்தை வைத்து நம் முக அழகை அதிகரிக்க ஒரு சூப்பரான பேச பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தேவையான பொருட்கள்;

  • உளுந்தம் பொடி – 3 டீஸ்பூன்
  • தேன் – 3 டீஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் – 3 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த பேஸ் பேக்கை நாம் தயார் செய்வதற்கு ஒரு பவுலில் 3 டீஸ்பூன் உளுந்தம் பொடியை எடுத்துக் கொள்ளவும். மேலும் இதோடு 3 டீஸ்பூன் தேன், 3 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது நம்முடைய முகத்தை சுத்தமாக கழுவி ஒரு காட்டன் துணியால் துடைத்துக் கொள்ளவும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பேஸ் பேக்கை முகத்தில் முழுவதுமாக அப்ளை செய்து ஒரு 20 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடவும். அதன் பிறகு முகத்தை வாஷ் செய்து கொள்ளவும். மேலும் இந்த பேக்கை வாரத்தில் ஒரு முறை நாம் பயன்படுத்தி வருவதன் மூலம் நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் வழுவழுப்பாக மாறுவதற்கு உதவியாக இருக்கும்.

விஷாலின் “மார்க் ஆண்டனி” படம் ரிலீஸாக தடை.., சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here