ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஜீவா, பார்த்திபன் இருவரும் எப்படியோ காவியா, பிரியாவை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். ஆனால் இவர்கள் வந்தது பிடிக்காமல் தேவியும் மஞ்சுவும் தொடர்ந்து பிரச்சினை செய்து கொண்டே இருக்கின்றன. இப்படி இருக்கும் நேரத்தில் ஐஸ்வர்யா போனில் மறைந்து பேசுவதை பிரியா கண்டுபிடித்து விடுகிறார். மேலும் இன்றைய எபிசோடில் ஒரு ஹோட்டலில் இருந்து ஐஸ்வர்யா அழுது கொண்டே வருவதை பிரியா பார்த்து விடுகிறார்.
இது குறித்து அவரிடம் கேட்கையில் நான் கோவிலுக்கு தான் சென்று வருவதாக பொய் சொல்கிறார். இதனால் பிரியாவுக்கு சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது பிரியா இனி வரும் எபிசோடுகளில் ஐஸ்வர்யா ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளார் என்பதை கண்டுபிடிப்பாராம். மேலும் அந்த விஷயத்தை என்ன என்று தெரிந்து கொண்டு குடும்பத்தார் அனைவரிடமும் சொல்வாராம். இதுதான் அடுத்த வரும் எபிசோடில் அரங்கேறும்.