மேடையில் கண்கலங்கிய ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலங்கள் – அதுவும் இதற்காகவா??

0

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியல் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது அதன் வெற்றி கொண்டாடத்தை கொண்டாட விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. தற்போது வெளியான ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் கண்கலங்கியுள்ளனர்.

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே சீரியல் 2018 இல் ஆரம்பித்து தற்போது வரை வெற்றி நடை போட்டு வருகிறது. மலர் வெற்றியின் அண்ணன் மாறனை காதலிக்க திருமணத்திற்கு சிறிது நாள் இருக்கும் வேளையில் ஒரு விபத்தில் உயிரிழந்து விடுகிறார். இதனால் வெற்றி மலரை திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது.

பிடிக்காமல் திருமணம் செய்துகொள்ளும் இருவர் எப்படி வாழ்க்கையில் ஒன்று சேர்க்கின்றனர் என்பது தான் கதையே. இருவரும் ஒன்று சேரும் நேரத்தில் பல தடங்கல்கள் வந்தாலும் அதனை தாண்டி இருவரும் பிரியாமல் வாழ்ந்து வந்தனர். வெற்றி போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வரையில் பிரச்சனை ஏற்பட்டது.

‘நீ இப்போ சொல்லு 100 பெற சுழட்டி அடிப்பேன்டி’ – தன் முரட்டு பக்கத்தை வெளியிட்ட அர்ச்சனா!!

இப்படி இருக்க தற்போது குடும்பம் அனைத்தும் ஒன்று சேர்ந்து விட தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. தேனுவின் திருமணத்தால் அவரின் அப்பா மனமுடைந்து இறந்தும் விடுகிறார். இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தால் பிரச்சனை அனைத்தும் முடிந்து விடும்.

மேலும் வரும் ஞாயிற்று கிழமை ஈரமான ரோஜாவே சீரியல் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. அதில் வெற்றியின் அப்பாவாக நடித்த வெங்கட் மாரடைப்பால் இறந்த நிலையில் சீரியல் பிரபலங்கள் கண்கலங்கியுள்ளனர். மேலும் அவரது புகைப்படத்தை அனைவருடனும் இருப்பது போன்று பெரிய ஃப்ரேம் செய்துள்ளனர்.

                                      ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here