சிக்குன்னு சேலையில் சிலை போல போஸ் கொடுத்த ‘ஈரமான ரோஜாவே’ பவித்ரா – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் நாயகியின் கியூட்டான புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பவித்ரா

ஈரமான ரோஜாவே சீரியல் தற்போது பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மலராக நடித்து வரும் பவித்ராவிற்கு தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம். ஆரம்பத்தில் சின்ன சின்ன தராபாத்திரத்தில் தான் நடித்து வந்தார்.

அதாவது முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான குலதெய்வம் சீரியலில் குட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தான் சரவணன் மீனாட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு சரவணன் மீனாட்சி 2 விலும் நடித்திருந்தார். அதில் ரக்ஷிதா, ரியோ ஜோடிக்கு கிடைத்த வரவேற்பை விட பவித்ராவுக்கு தான் அதிக ஆதரவு கிடைத்தது. அதன் பிறகு அவர் ஈரமான ரோஜாவே சீரியலில் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

தன் காதலை கரம் பிடிக்க போன நேரத்தில் அவர் விபத்தில் உயிரிழக்க அவரது தம்பி வெற்றியை திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதன் பிறகு இருவருக்குள்ளும் காதல் ஏற்படும் சூழலை தான் கதையாக எடுத்துள்ளனர்.

அவர்களின் காதல் பரிசாக மலர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இப்படி இருக்க தற்போது அவர் மஞ்சள் நிற சேலையில் அடக்க ஒடுக்கமாக எடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தை ட்ரெண்டாக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here