
ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இப்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. காவியா கலெக்டர் ஆனதை கொண்டாடும் விதமாக பார்த்திபன் வீட்டையே ரகளை செய்கிறார். ஆனால் இது தேவிக்கும் மஞ்சுவுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ஏதோ தவறு செய்கிறார் என்பதை தெரிந்து கொண்ட பிரியா அதற்கான ஆதாரத்தை தேடுகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக நகரும் நேரத்தில் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது காவியாவின் கர்ப்பம் கலைஞ்சதற்கு தேவி தான் காரணம் என்ற உண்மை பார்த்திபனுக்கு தெரிய வருமாம். மேலும் இனி காவியாவிற்கு குழந்தையை பிறக்காத அளவுக்கு தேவி சூழ்ச்சி செய்துள்ளார் என்ற விஷயம் தெரிந்த பார்த்திபன் சுக்கு நூறாக உடைந்து போவாராம். நிச்சயம் இந்த விஷயம் தெரிந்து தேவியை பார்த்திபன் சும்மா விட மாட்டார். இதனால் அடுத்த எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.