
ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பிரியா ஐஸ்வர்யா மேல் உள்ள சந்தேகத்தை ஜீவாவிடம் சொல்கிறார். இதனால் ஜீவா அர்ஜுனிடம் விசாரிக்க அவருக்கும் சந்தேகம் வருகிறது. பின் அர்ஜுன் ஐஸ்வர்யாவிடம் உனக்கு என்ன பிரச்சனை என்று விசாரிக்க அவர் வழக்கம் போல் ஏதேதோ சொல்லி மழுப்பி விடுகிறார். இப்படி இருக்கையில் சீரியலில் இனிவரும் எபிசோடுகளில் ஜீவா, ஐஸ்வர்யா பற்றி அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து அருணாச்சலத்திடம் சொல்லி விடுவாராம்.

அருணாச்சலம் ஐஸ்வர்யாவிடம் இதெல்லாம் என்ன என்று கேட்க அவர் நடந்ததை சொல்வாராம். இதைக் கேட்ட அருணாச்சலம், பார்வதி இத்தனை நாள் உண்மைய சொல்லாம இருந்துட்டீங்க. என்ன நீங்க எல்லாம் நம்ப வச்சு ஏமாத்திட்டீங்க. நானே என் பையன் வாழ்க்கை நாசமா போறதுக்கு காரணமாகிட்டேன். இனியும் நான் இந்த மாதிரி முட்டாள்தனமான முடிவு எடுக்க மாட்டேன். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் நான் சக்தியை அர்ஜுனுக்கு கல்யாணம் செய்து வைக்கப் போகிறேன் என்பாராம். இதை கேட்ட மஞ்சு அருணாசலத்திடம் சண்டை போடுவாராம்.