ஈரமான ரோஜாவே 2 சீரியல் பிரியா காவியாவை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் தன் மகள் தான் இந்த வீட்டுக்கு ஒரே மருமகளாக இருக்க வேண்டும் என மஞ்சு பல சாதிகளை செய்கிறார். ஆனால் இதை பிரியா, காவியா ஒவ்வொரு முறையும் முறியடித்து கொண்டே இருக்கின்றனர். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ஏதோ தப்பு செய்கிறார் என்பதை பிரியா கண்டுபிடிக்கிறார். மேலும் இதை ஆதாரப்பூர்வமாக அருணாச்சலம் மாமாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். இன்றைய எபிசோடில் கூட ஐஸ்வர்யா சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பையனோடு பேசுவதைப் பார்த்து பிரியா அதிர்ச்சியாகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது மஞ்சு பிரியா காவியாவை மட்டம் தட்டி பேசுவாராம். மேலும் அவர்கள் குடும்பத்தை பற்றியும் அசிங்கமாக வந்தபடி பேசுவாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பிரியா போதும் நிறுத்துங்க. உங்க பொண்ணு மாதிரி நாங்க கிடையாது. உங்க பொண்ணோட லட்சணம் இதுதான் என எல்லா தேடி வைத்திருந்த அனைத்து ஆதாரத்தையும் மஞ்சு, அருணாச்சலத்திடம் காண்பிப்பாராம். இதை பார்த்த அருணாச்சலம் மஞ்சுவிடம் இதெல்லாம் என்ன என்று சத்தம் போடுவாராம்.