சூழ்ச்சி செய்து பிரியாவை சிக்க வைக்கும் தேவி.., அருணாசலம் எடுக்கப்போகும் முடிவு என்ன?? ஈரமான ரோஜாவே ட்விஸ்ட்!!

0
சூழ்ச்சி செய்து பிரியாவை சிக்க வைக்கும் தேவி.., அருணாசலம் எடுக்கப்போகும் முடிவு என்ன?? ஈரமான ரோஜாவே ட்விஸ்ட்!!
சூழ்ச்சி செய்து பிரியாவை சிக்க வைக்கும் தேவி.., அருணாசலம் எடுக்கப்போகும் முடிவு என்ன?? ஈரமான ரோஜாவே ட்விஸ்ட்!!

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் ஐஸ்வர்யா ஏதோ தப்பு செய்கிறார் என்பதை தெரிந்து கொண்ட பிரியா அதை கண்டுபிடிக்க ஆதாரங்களை தேடுகிறார். இன்னொரு பக்கம் தேவி, மஞ்சுவுக்கு காவியா, பிரியா வீட்டுக்கு வந்தது சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே அவர்களை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும் என திட்டம் தீட்டுகின்றனர். இந்த நேரத்தில் அடுத்த எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் அருணாச்சலத்திடம் ஒருவர் எனக்கு பிளாட் வாங்க வேண்டும் என்று சொல்லி அதற்கான பணத்தை கொடுக்கிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

உடனே அருணாச்சலம் யாரோ பிரியா, காவியா வந்த நேரம் சரியில்லைன்னு சொன்னாங்க. ஆனா இப்போ எப்படி நல்ல நேரமா இருக்குன்னு பாருங்க என தேவி, மஞ்சுவை சூசகமாக குத்திக் காட்டுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தேவியும் மஞ்சுவும் அருணாச்சலம் ரூமில் உள்ள பணத்தை எடுத்து பிரியா ரூமில் வைக்கின்றனர். பின் அருணாச்சலம் பணத்தை காணோம் என்று சொல்ல தேவியும் மஞ்சுவும் பிரியா தான் எடுத்திருப்பார் என்று சொல்லி அவரது ரூமில் தேடுகின்றனர். அப்போது பிரியாவின் பேக்கில் பணம் இருப்பதை பார்த்து குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியாகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

சின்னத்திரை ரசிகர்களே., தீபாவளிக்கு இந்தெந்த படங்கள் தான் ஒளிபரப்பாகும்., வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here