அம்பலமான ஜீவா-காவியா காதல் விவகாரம்.., கடைசி நேரத்தில் பார்வதிக்கு வந்த ஆப்பு.., சூடுபிடிக்கும் ஈரமான ரோஜாவே 2!!

0

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது ரம்யா பார்த்திபன் திருமணம் நடக்குமா? நடக்காதா?? என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். மேலும் காவியா பார்த்திபனை பிரிய முடியாமல் வேதனையில் இருந்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது இத்தனை நாள் ரசிகர்கள் காத்திருந்த அந்த காட்சி அரங்கேறியுள்ளது.

 

அதாவது பார்த்திபன் திருமண விழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்க அப்பொழுது பார்வதியின் தோழி வந்து காவியா காதலித்த பையன் இவர் தான் என்று ஜீவாவை காட்டுகிறார். இதனால் பார்வதிக்கு தலையே சுத்துகிறது. ஜீவாவின் கன்னத்தில் அறைந்து காவியா காதலிச்சது யாரு என்று கேட்கிறார்.

ஜீவாவும் அனைத்து உண்மைகளையும் சொல்கிறார். இதனால் இடிந்து போகும் பார்வதி என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருக்க அப்பொழுது அங்கு வரும் JK இப்பொழுது அனைவரின் வாழ்க்கையும் சீரழிய முக்கிய காரணம் தேவி அத்தை தான் என்று சொல்கிறார்.

இனி நான் உன் தம்பி கிடையாது.., இதோடு ஒட்டு உறவே வேணாம்…, ஜீவா எடுத்த அதிரடி முடிவு.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

பார்வதி தேவியிடம் சென்று இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்கிறார். அவரின் தலையில் அடித்து மயக்கமடைய செய்து ரூமில் பூட்டி வைக்கின்றனர். அடுத்து தாலி கட்ட பார்த்திபன் தயாராகிறார். கல்யாணம் நடக்குமா?? பார்வதி தப்பிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here