
ஈரமான ரோஜாவே 2 சீரியலில் ஐஸ்வர்யா பற்றிய உண்மையை எப்படியாவது வெளிக்கொண்டு வரவேண்டும் என பிரியா நினைக்கிறார். அதற்கு ஜீவாவிடம் உதவி கேட்கிறார். அதன்படி ஜீவா பிரியாவிடம் உண்மைய நம்ம நிரூபிக்க சரியான ஆதாரம் வேண்டும். அதுவரை நம்ம அமைதியா தான் இருக்க முடியும் என்று சொல்லி ஜீவா பிரியாவை சமாதானப்படுத்துகிறார். இப்படி இருக்கும் சூழலில் ஜீவாவும் பிரியாவும் வெளியே தங்கி அந்த ஐஸ்வர்யாக்கும் அந்த பையனுக்கும் என்ன சம்பந்தம் என்பதை தெரிந்து கொள்ள பல ஆதாரங்களை திரட்டுவார்களாம்.
Enewz Tamil WhatsApp Channel
கடைசியில் ஒட்டுமொத்த ஆதாரத்தையும் அருணாச்சலம் முன் காண்பித்து ஐஸ்வர்யா வயிற்றில் வளர்வது அர்ஜுன் குழந்தை இல்லை என சொல்வார்களாம். உடனே அர்ஜுனும் எனக்கு ஐஸ்வர்யாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்ல அருணாச்சலம் உடைந்து போவாராம். இந்த அனைத்து உண்மைகளையும் தெரிந்து மஞ்சு அருணாச்சலத்திடம் தன் மகளை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுவாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.