தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி மாற்றம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி மாற்றம்
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி மாற்றம்
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி மாற்றம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப TN TRB தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி தேர்வர்கள் ஆசிரியர் பணியில் சேர பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இடைநிலை, நடுநிலை பள்ளி பட்டதாரி, உயர்நிலைப்பள்ளி பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய தனி தனி  தேர்வுகளும் விதிகளும் விதிக்கப்பட்ட உள்ளது. இதில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வாக பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்புடன் டி.எல்.எட்., அல்லது பி.எல்.எட்., அல்லது பி.எட்., படிப்பு முடித்தவர்கள் தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இந்த விதி தமிழக அரசால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனிவரும் நாட்களில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்புடன் டி.எல்.எட்., என்ற தொடக்க கல்வி டிப்ளமா படிப்போ அல்லது, பி.எல்.எட்., என்ற நான்காண்டு ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் தகுதி பெறலாம் என பள்ளி கல்வித்துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. இத்துடன் டெட் தேர்வின் முதல் தாளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here