முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடப்பாடி பழனிச்சாமி – தேர்தல் முடிவு எதிரொலி!!

0
eps

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை கைப்பிடிக்க தவறியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி:

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த முதல்வர் பதவி ஏற்கும் தருணம் ஏற்பட்டுள்ளது. அதற்காக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் நேற்று(மே 2) வெளியானது. கொரோனா நோய்த்தொற்றிற்கு மத்தியில் மிக பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தமிழகத்தில் ஏற்படவுள்ள மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அதன்படி தமிழகத்தில் திமுக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் அதிமுக கட்சி 65 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்பு உதித்த சூரியன் – கொண்டாடும் தொண்டர்கள்!!

இதனை தொடர்ந்து தமிழகத்தின் அடுத்த புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் வருகிற மே மாதம் 7ம் தேதி அன்று பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் முதல்வராக திகழும் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது தனது ராஜினாமா கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித்திற்கு அனுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here