Friday, April 19, 2024

வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – முதல்வர் பேச்சு!!

Must Read

தமிழக மக்களுக்கு ஆதரவு தரும் மற்றும் நலன் தரும் எந்த திட்டமாக இருந்தாலும் அதிமுக அரசு அதனை ஆதரிக்கும் என்றும் கொரோனா பரவலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பேட்டி:

மதுரை மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள வேளாண் மசோதா குறித்தும் பேசினார். அவர் கூறியதாவது “தமிழக மக்களுக்கு நலன் நல்கும் திட்டத்தை தான் அதிமுக அரசு ஆதரிக்கும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

tamilnadu cm speech
tamilnadu cm speech

“மத்திய அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் மசோதாவால் விவாசிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் வராது. நல்ல முன்னேற்றம் தான் இருக்கும். கிராமத்தில் உள்ள விவாசிகளின் பொருளாதாரம் உயரும். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பிற்கான சாத்திய கூறுகள் அதிகமாகும். விவசாயிகள் விருப்பம் இருந்தால் மட்டும் வியாபாரிகளிடம் ஒப்பந்தம் போட்டு கொள்ளலாம். உணவு பதப்படுத்துதல் துறையில் நல்ல மாற்றம் வரும், அதனால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.”

“நான் ஒரு விவசாயி”:

“அது அவர்களது முடிவு தான். நான் ஒரு விவசாயி, அதனால் தான் இந்த திட்டத்தை ஆதரித்துள்ளேன். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது. விளைபொருட்களின் விலையை விவசாயிகளே முடிவு செய்துகொள்ளலாம்.”

சிஎஸ்கே vs மும்பை மேட்ச் – இத்தன கோடி பேர் பார்த்தோமா??

“வேளாண் மசோதா குறித்து வெளிவரும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அது வெறும் வதந்தி தான்.” என்று தெரிவித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -