முட்டை பரோட்டாவையே தோற்கடிக்கும் சுவையான கீமா முட்டை சப்பாத்தி…!வீட்டில செஞ்சு அசத்துங்க!!!

0

பரோட்டா என்றால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் விருப்ப உணவு பொருளாக உள்ளது. மேலும் எந்த அளவிற்கு சுவை உள்ளதோ அந்த அளவிற்கு தீங்கும் உள்ளது. இதனாலேயே அனைவரும் இதனை தவிர்க்க வேண்டி உள்ளது. இந்நிலையில் அதே சுவையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சப்பாத்தியை வைத்து, இப்படி ஒரு வித்தியாசமான முறையில் கீமா முட்டை சப்பாத்தி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை – 2

சப்பாத்தி – 5

வெங்காயம் – 1

இஞ்சி பூண்டு விழுது – 1/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 1

தக்காளி – 1

கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கருவேப்பில்லை – சிறிதளவு

கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

புதினா – சிறிதளவு

செய்முறை

முதலில் 5 சப்பாத்திகளை கைகளால் நன்கு சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர்  அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும். அதன் பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாடை போக வதக்க வேண்டும். இதையடுத்து மீண்டும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொண்டு அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி வேண்டும். அதனுடன் சிறிதளவு கரம் மசாலா,உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.

அதன் பின்னர் கட் செய்து வைத்து உள்ள சப்பாத்தி துண்டுகளை சேர்த்து உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் போட்டு, சிறிதளவு தண்ணீர் தெளித்து கிளறி விட வேண்டும். அதன் மேல் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா தூவி ஒரே ஒரு கிளறு கிளறி இறக்கி வைத்து கொள்ள வேண்டும். தற்போது மணமான சுவையான கீமா முட்டை  சப்பாத்தி தயார்.

குறிப்பு : இதில் முட்டைக்கு பதிலாக வேகவைத்த சிக்கன்,மட்டன் அல்லது காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here