கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியதால் மக்கள் மக்கள் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். தற்போது இதைத்தொடர்ந்து வங்கக் கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.2 டாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் வங்கக்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது போன்று நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் கடந்த 4ஆம் தேதி நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை மட்டுமே 128 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.