ரூ.25000க்கு கார் மேட் ஆர்டர் செய்த தம்பதி.. ஆனா வந்தது என்ன தெரியுமா??

0

சமீபகாலமாக e-commerce எனப்படும் ஆன்லைன் வர்த்தக மோகம் நம்மில் பலருக்கு தொற்றி கொண்டது. அதிலும் இந்த கொரோனா காலம் நம்மை வீட்டிலையே முடக்கி போட்ட நிலையில் இந்த வசதி நமக்கு பெரிதும் பயன்பட்டு தான் வருகிறது என்று சொல்லலாம். அதன் வகையில் இங்கிலாந்து பெண்மணி ஒருவர் ரூ.25,000க்கு கார் மேட் ஒன்றை ஆர்டர் செய்து உள்ளார்.ஆனால் அவருக்கு கிடைத்தது கைக்குள் அடங்கும் ஒரு பொம்மை கார் மேட்.

நாம் நேரில் சென்று பொருட்களின் தரத்தை ஆராய்ந்து,அதை தொட்டு பார்த்து, அதன் விலையை விசாரித்து,பொருட்களின் விவரங்களை அறிந்து வாங்கிய காலம் எல்லாம் மலையேறி தான் போய்க்கொண்டு இருக்கிறது. இப்போது எல்லாம் கையடக்க செல்பேசி அல்லது கணினி வாயிலாக பொருட்களை பார்த்து, அதன் வாயிலாகவே பணத்தையும் செலுத்தி வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கும் நிலை தான் தற்போது அதிகம் நிலவுகிறது.

இந்த முறையில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளும் நிகழத்தான் செய்கிறது. அதாவது பொருள்களின் தரத்தில் குறைவு, நிறம் மாறுதல், மேலும் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்கள் வருதல் இவ்வாறு பல்வேறு குழப்பங்கள் நிகழத்தான் செய்கிறது.

அந்த வகையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு  ஒரு கார் மேட்டை பரிசாக அளிக்க விரும்பி உள்ளார். அதன்படி, ரூ.25,000க்கு அந்த கார் மேட்டை ஆர்டர் செய்து உள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்ததோ கைக்குள் அடங்கும் அளவில் உள்ள சிறு குழந்தைகள் விளையாடும் வகையிலான கார் மேட் மட்டுமே. இது அந்த தம்பதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் பகிர்ந்த அந்த கார் மேட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here