ராஜஸ்தான் அணியை பந்தாடிய மும்பை அணி – இறுதி கோல் ஷாட்டில் பரபரப்பு!

0
ராஜஸ்தான் அணியை பந்தாடிய மும்பை அணி - இறுதி கோல் ஷாட்டில் பரபரப்பு!
ராஜஸ்தான் அணியை பந்தாடிய மும்பை அணி - இறுதி கோல் ஷாட்டில் பரபரப்பு!

டுராண்ட் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் ஒடிசா அணிகள் சிறப்பாக விளையாடி எதிரணியை வீழ்த்தி வெற்றியை கைப்பற்றினர்.

டுராண்ட் கோப்பை கால்பந்து:

கால்பந்து தொடரில் 20 அணிகள் பங்கேற்றுள்ள டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தா, இம்பால், கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை சிட்டி அணி, ராஜஸ்தான் யுனைடெட்டை அணிகளை எதிர்கொண்டது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் இதில் சிறப்பாக விளையாடிய மும்பை அணி அதிக கோல் அடித்து 5-1 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போன்று மற்றொரு நகரமான கவுஹாத்தியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா அணியை டெல்லி அணி எதிர்கொண்டது. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணி என்பதால் போட்டி கடுமையாக நடைபெற்றது. ஆனாலும் வெற்றியை விட்டுக் கொடுக்காத ஒடிசா அணி 3 – 0 என்ற கோல் கணக்கில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த அணி இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் தொடர் வெற்றியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here