மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மம்முட்டி இன்று தனது 72 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் நடிகர் மம்முட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘பிரம்மயுகம்’ என்ற திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் மம்முட்டியின் மகனும், முன்னணி நடிகருமான துல்கர் சல்மான் தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த பதிவில், ‘நான் குழந்தையாக இருக்கும் போது பெரியவனானால் உங்களைப் போன்று இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல கேமராவுக்கு முன்னால் முதல் முறையாக நின்ற போது உங்களைப் போல ஒரு நல்ல நடிகனாக வேண்டும் என்று நினைத்தேன். நான் அப்பாவான போதும் உங்களைப் போல இருக்க வேண்டும் என நினைத்தேன். என்றாவது ஒரு நாள் உங்களில் ஒரு பாதியாக இருப்பேன் என்று நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.