முதன் முறையாக துல்கர் சல்மான் பாடிய பாடல் வீடியோ வெளியீடு – என்ன ஒரு உற்சாகத்தில் பாடியுள்ளார் மனுஷன்!!

0

துல்கர் சல்மான் தற்போது ”ஹே சினாமிகா” என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவர் பாடிய பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த பாடலின் சில பகுதிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அச்சமில்லை பாடல்:

நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் தற்போது திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். முதல் திரைப்படமாக ‘ஹே சினாமிகா’ என்னும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து அதிதி, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

Dulquer
Dulquer

ஹே சினாமிகா திரைப்படத்தில் அச்சமில்லை என்னும் பாடல் இடம்பெற்றுள்ளது. கதாநாயகனாக இருந்து வந்த துல்கர் தற்போது இந்த பாடலை முதன் முறையாக பாடியுள்ளார். இந்த பாடலை படக்குழுவினர் வெறும் 45 நிமிடத்திலேயே பதிவு செய்துள்ளனராம். அந்த வகையில் துல்கர் அச்சமில்லை பாடலை மிகவும் புத்துணர்ச்சியுடன் துள்ளி ஆடியபடி பாடியுள்ளார். இந்த பாடல் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது. இவர் பாடிய சிறிய தொகுப்பு வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here