பண்டிகை காலத்தை முன்னிட்டு உயரும் ரயில், விமான டிக்கெட்டுகளின் விலை.., அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

0
பண்டிகை காலத்தை முன்னிட்டு உயரும் ரயில், விமான டிக்கெட்டுகளின் விலை.., அதிர்ச்சியில் பொதுமக்கள்!!
பண்டிகை காலத்தை முன்னிட்டு உயரும் ரயில், விமான டிக்கெட்டுகளின் விலை.., அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

சாதாரணமான நாட்களில் ரயில், விமான பயணிகளுக்கு வசூல் செய்யப்படும் பயணக் கட்டணங்கள் தற்போது பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 3 மடங்கு ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட் விலை:

கல்வி, வேலை காரணமாக வெவ்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் தங்கி உள்ள ஏராளமானோர், பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் அடுத்த மாதம் தீபாவளி, தசரா போன்ற பண்டிகைகள் வர உள்ளன. இந்நிலையில் பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு பயணங்களுக்கான டிக்கெட்டுகளை பெறுவது மிகவும் சிரமமாக மாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து உள்நாட்டுப் பயணங்களுக்கான ரயில், விமான டிக்கெட் விலை பல மடங்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதாவது, முக்கிய நகரங்களுக்கான தியோகர், லக்னோ, வாரணாசி பாட்னா, கோரக்பூர், தர்பங்கா, போன்ற நகரங்களுக்கான டிக்கெட்டுகளை பெற முடியாத நிலை தற்போது உருவாகி உள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் பருவகால நோய்கள் – அரசு எடுத்த அதிரடி முடிவு! வரவேற்பு அளித்த பொதுமக்கள்!!

இந்த வகையில் டெல்லியில் இருந்து பாட்னா, தர்பங்கா, ராஞ்சி போன்ற நகரங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான விமான டிக்கெட்டுகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதாவது வழக்கமான நாட்களில் ரூ.5000, ரூ.6000 ஆக இருந்த விமான பயண கட்டணம் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here