வித்தியாசமான முறையில் சிக்கன் சுக்கா ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0

சிக்கன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு ஒரு தனி பிரியம் தான். சிக்கனை வைத்து எளிதில் பல டிஸ்களை செய்ய முடியும். அந்த வகையில் இப்பொழுது சிக்கனை வைத்து வித்தியாசமான முறையில் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கி

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

கருவேப்பிலை

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கனை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் கருவேப்பிலை, சோம்பு சேர்த்து வதக்கி அதனுடன் சிக்கனை சேர்க்கவும். சிக்கன் அடிபிடிக்காத அளவிற்கு வதக்க வேண்டும்.

இதனை ஒரு 4 நிமிடங்கள் அடுப்பை சிறிதாக வைத்து விட்டு மூடி வைக்கவும். இப்பொழுது மீண்டும் வதக்கி விட்டு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறி விடவும். அதன் பிறகு மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.

எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை சிக்கனை கிளறிக்கொண்டே இருக்கவும். சிக்கன் நன்கு வெந்து மசாலாவுடன் இணைந்து மொறுமொறுப்பாக வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் சுக்கா ரெசிபி தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here