ஒரு வழியாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் – நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்!!

0

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேலாக மக்களை அல்லல் படவைத்த நோய்களில் ஒன்று கொரோனா. இந்த நோய்க்கு தடுப்பூசிகள் பல்வேறு நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதற்கான மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றும் சரியான பலன் கிட்டவில்லை.

மேலும் இந்த கொரோனா முதல், இரண்டாம், மூன்றாம் என அடுத்தடுத்து அலையாக வேறு உருமாறி வருகிறது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு மற்றொரு பெரிய தலைவலியாக உருவாகியது. தற்போது உலக நாடுகளில் இரண்டாம் அலை பரவல் குறைந்து மூன்றாம் அலை பரவலின் அச்சம் தொற்றி கொண்டு உள்ளது.

இந்நிலையில் போர்ச்சுக்கலில் உள்ள லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான ரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், குறிப்பிட்ட 3 மருந்துகளின் கலவையானது கொரோனா நகலெடுப்பை அதாவது உடலில் பல்கி பெருகுவதை 50% குறைக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இதில் பயன்படுத்தப்படும் இரண்டு மருந்துகள் பிற நோய்களுக்கு மருந்தாகவும், மீதமுள்ள ஒரு மருந்து சந்தை ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here