அரசுப் பள்ளி ஆசிரியர்களே., இனி இந்த முறையிலான ஆடைகள் தான் அணிய வேண்டும்?? கல்வித்துறை உத்தரவு!!!

0

நாகரிக வளர்ச்சி காரணமாக வண்ணமயமான, கவர்ச்சியான ஆடைகள் சர்வ சாதாரணமாகிவிட்டது. பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளை தொடர்ந்து ஆசிரியர்களும் ஆடை பழக்கத்தை மாற்றி வருகின்றனர். அந்த வகையில் அசாம் மாநிலத்தில் ஒரு சில ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத படி ஆடைகள் அணிந்து வருவதாக பொதுமக்கள் பலரும் புகார் எழுப்பி வந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதைத்தொடர்ந்து அம்மாநில கல்வித்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பெண் ஆசிரியர்கள் பார்ட்டி டிரஸ், லெக்கின்ஸ் உள்ளிட்ட ஆடைகளை தவிர்த்து சேலை, முறையான சல்வார் சூட் உள்ளிட்டவைகளை அணிய வேண்டும். இதேபோல் ஆசிரியர்கள் ஜீன்ஸ், டீ ஷர்ட் உள்ளிட்டவைகளை தவிர்த்து கேஷுவல் ஷர்ட் அண்ட் பேண்ட் மட்டுமே அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

ரேஷன் அட்டைதரர்களே…, உங்களுக்காகவே பிரத்யேகமாக வெளியான முக்கிய அறிவிப்பு!!

மாநில அரசின் இந்த ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக கல்வித்துறை எச்சரித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் உள்ளிட்ட பலரின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here