ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்திற்கு ஒசாகா விருது – குவியும் வாழ்த்துக்கள்!!

0

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் கைதி. தற்போது இந்த படத்தை தயாரித்த ட்ரீம் வாரியார்ஸ் நிறுவனத்திற்கு ஒசாகா விருது வழங்கப்பட்டுள்ளது.

கைதி:

நடிகர் கார்த்தியின் எதார்த்த நடிப்பில் வெளியான படம் தான் கைதி. இந்த படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். லோகேஷின் அனைத்து படமும் மிக தனித்துவமான கதைக்களத்தை கொண்டுள்ளது என்றே சொல்லலாம். காரணம் இவர் இயக்கிய மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய மூன்று திரைப்படம் மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றது. மேலும் இந்த படங்கள் அனைத்தும் மக்களை கவரும் வண்ணத்தில் இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் கைதி படமும் பலரது மனதில் நீங்கா இடத்தை பிடித்தது என்றே சொல்லலாம். காரணம் அந்த படத்தில் நடிகை கிடையாது மேலும் பாடல் கிடையாது இருந்தாலும் அந்த படத்தை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்றால் அந்த அளவிற்கு கதையம்சம் சிறப்பாக உள்ளது என்று தானே அர்த்தம். இந்த படம் வெளியானதில் இருந்து பல தரப்பினரிடம் பாராட்டை பெற்றது.

அதிமுக பாமக இடையே மோதலா??வன்னியர் இடஒதுக்கீடு குறித்த புதிய சர்ச்சை!!

மேலும் பல விருதுகளையும் குவித்து வந்தது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிச்சர்ஸ் தயாரித்தது. தற்போது இந்த படத்தை தயாரித்ததாக ட்ரீம் ரியாஸ் நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை ஒசாகா வழங்கியுள்ளது. கைதி படத்தை தயாரித்ததற்காக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்திற்கு பெஸ்ட் ப்ரொடக்சன் கவுஸ் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here