மருத்துவ மாணவி மரணம்  …! – கேரளாவில் அரங்கேறிய கொடுமை !!!

0

கேரளாவில் உள்ள சாஸ்தாங்கோட்டையை சேர்ந்தவர்  விஸ்மயா. இவருக்கு 24 வயது ஆகிறது. இவருக்கும் கிரண் குமார் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்து உள்ளது. இந்நிலையில் கணவன் கிரண் குமார் மற்றும் அவரின் குடும்பத்தினரும் விஸ்மயாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் விஸ்மயா தனது வீட்டு  குளியலறையில் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த நிகழ்வு அவரின் குடும்பத்தினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்மயா என்னும் 24 வயது இளம் பெண்ணை அவரின் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு  துன்புறுத்தி உள்ளனர். மேலும் தனது தகுதிக்கு ஏற்ப வரதட்சணை தருமாறு அடிக்கடி விஸ்மயா விடம் சண்டை போட்டு உள்ளார். அதோடு மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின்  குடும்பத்தினரையும் வார்த்தைகளால் தொடர்ந்து  காயப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த பெண் மனதாலும் உடம்பாலும் மிகுந்த சித்திரவதைக்கு உள்ளாகினார்.

மேலும் அந்த ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, வாட்ஸ்அப்பில் தனது அப்பா தன் திருமணத்தின் போது தனக்கு பரிசாக வழங்கிய காரை கிரண் குமார்  விரும்பவில்லை எனவும் அதற்கு பதிலாக அவர்  பணத்தையே அதிகம் விரும்பியதாகவும் கூறியுள்ளார். மேலும்  அவ்வப்போது அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதால் உடலில் ஏற்படும் காயங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டு உள்ளார். மேலும் இதில் தன்னுடைய  தலைமுடியை இழுத்து கிரண் அடித்தார் என்றும் கதவோடு தலையை வைத்து அடித்தார் என்றும் தெரிவித்து இருந்தார். இதனால் மனமுடைந்த விஸ்மயா குளியலறையில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் தந்தை கூறுகையில், தனது மகள் உடலாலும் மனதாலும் மிகுந்த வேதனையை அனுபவித்து வந்தாள். மேலும் தன் மகள் தற்கொலை செய்து இருக்கமாட்டாள் அவளின் கணவன் குடும்பத்தினர் அவளை கொலை செய்து இருப்பார்கள் என வருத்தத்துடன் கூறியுள்ளார். இதையடுத்து கேரளா போலீஸ் கிரண் குமாரை கைது செய்து இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அங்கு மிகுந்த பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here