வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் இரட்டிப்பு அபராதம்

0

மத்திய பட்ஜெட் அறிக்கையில் வெளியான அறிவிப்புகளின் அடிப்படையில், நிதியியல் கொள்கை 2021 கீழ் ஜூலை 1ஆம் தேதி சில முக்கிய வருமான வரி வரைமுறைகள் மாற்றம் செய்யப்பட உள்ளது.

மத்திய பட்ஜெட்:

நிதியியல் சட்டம் 2021 படி, வருமான வரி செலுத்துவோர் கடந்த இரண்டு வருடமாக வருமான அறிக்கையைத் தாக்கல் செய்யாமல் இருக்கும் பட்சத்திலும், அவர்களின் டிடிஎஸ் அளவு வருடத்திற்கு 50000 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் பட்சத்திலும் வருமான வரித்துறை டிடிஎஸ் தொகையில் இரட்டிப்பு அளவீட்டை வசூலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வருமான வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் முன்கூட்டியே திட்டமிட்டுத் தாக்கல் செய்யப்படாத வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்திடுங்கள். தவறினால் 50000 டிடிஎஸ் தொகைக்கு 100000 வரை செலுத்த நேரும் என கூறப்படுகிறது. இரட்டிப்பு டிடிஎஸ் தொகையை வசூலிக்கச் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் தயாரித்த நிதியியல் கொள்கை 2021ல் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தச் சிறப்பு அனுமதியின் கீழ் வருமான வரித் துறை, வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யாதவர்களிடம் 3 வகையில் டிடிஎஸ் தொகையை வசூலிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. 1. இரட்டிப்பு டிடிஎஸ் தொகை அல்லது 2. இரட்டிப்பு வரி விகிதம் அல்லது 3. 5 சதவீதம் வரி அளவு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் வருமான வரித்துறை கையில் எடுக்கும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here