Double Mutant கொரோனா தமிழகத்தில் பரவுகிறதா?? ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

0

இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு மரபணு மாறிய கொரோனா தொற்று பரவுவதை கண்டறியப்பட்டது. தற்போது இந்த மரபணு மாறிய கொரோனா தமிழகத்தில் பரவுகிறதா என்று சுகாதாரத்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

மரபணு மாறிய கொரோனா:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் வேகம் அதிகமாகி வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் மரபணு மாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் இதற்கு Double Mutant Variant என்று அழைக்கப்படுகிறது. இந்த தொற்று வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் கண்டறியப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அதற்கான ஆய்வுகளின் முடிவுகள் விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதற்கு மக்கள் அனைவரும் மாஸ்க் அணியாததே காரணம் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளோம்.

இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்ட கூடும். மேலும் அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மிக தீவிரமான முறையில் எடுத்து வருகிறோம். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா காரணமில்லை. மேலும் தற்போது வரை தமிழகத்தில் Double Mutant கொரோனா பாதிப்பை கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here