இனி அவர்களை துன்புறுத்த கூடாது.. மூன்றாம் பாலினத்தவருக்கு விடியலை தேடி தந்த உயர்நீதி மன்றம்!!

0
இனி அவர்களை துன்புறுத்த கூடாது.. மூன்றாம் பாலினத்தவருக்கு விடியலை தேடி தந்த உயர்நீதி மன்றம்!!
இனி அவர்களை துன்புறுத்த கூடாது.. மூன்றாம் பாலினத்தவருக்கு விடியலை தேடி தந்த உயர்நீதி மன்றம்!!

சென்னை உயர் நீதிமன்றமானது 3 ஆம் பாலினத்தவர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களை காவல்துறையினர் துன்புறுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வானது தன்பாலின சேர்க்கை குறித்து விசாரித்து அதற்கான தீர்ப்பையும் வழங்கியது. அதன்படி இந்தியாவில் ஓரின சேர்க்கையானது சட்டபூர்வமாக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பிற்கு அதிகப்படியான எதிர்ப்புகளும் எழுந்து வந்தன.

3 ஆம் பாலினத்தவரை துன்புறுத்தினால் நடவடிக்கை :
3 ஆம் பாலினத்தவரை துன்புறுத்தினால் நடவடிக்கை :

சமீபத்தில் மதுரையை சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகி , அதன்பின் காதலாக மாறியதால் பிரிய மனமில்லாமல் சேர்ந்துவாழ நினைத்துள்ளனர். ஆனால் இவர்களின் இந்த முடிவுக்கு இவர்களின் பெற்றோர்களின் தரப்பு மறுப்பு தெரிவித்து பிரிக்க முயன்றதால் , இருவரும் சென்னைக்கு சென்று வேலைதேடினர். இந்த சூழ்நிலையில் இவர்களின் பெற்றோர் இவர்களை காணவில்லை என்று புகார் அளித்த நிலையில் இருபெண்களும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி வழக்கு தொடர்ந்தனர்.

3 ஆம் பாலினத்தவரை துன்புறுத்தினால் நடவடிக்கை :
3 ஆம் பாலினத்தவரை துன்புறுத்தினால் நடவடிக்கை :

அதன்படி இன்று (செப்.01) வழக்கானது விசாரணைக்கு வந்தது. இதன்படி மூன்றாம் பாலினத்தவர், தன் பாலின ஈர்ப்பாளர்களை எப்படிக் கையாள வேண்டும் என்றும், அவர்களைத் துன்புறுத்தக் கூடாது எனவும், காவல் நிலையங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்துக் காவலர்களுக்குக் காவலர் பயிற்சி மையம் மூலமாகப் பயிற்சி அளிக்கப்படும் எனவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here