சொந்தமாக சமூகவலைத்தளங்களை ஆரம்பிக்க இருக்கும் டிரம்ப் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் பற்றிய ஓர் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அவர் தனக்கென சொந்தமாக சமூகவலைத்தளம் தொடங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப்:

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபருக்கான தேர்தலில் பல பிரச்சனைகள் நிலவியது. மேலும் அதற்கான முடிவுகள் வெளிவந்த பிறகு டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் பிரச்சனைகளை கிளப்பி ஜோ பைடனை அதிபர் பதவியை ஏற்க விடாமல் தொடர்ந்து பல இன்னல்களை விளைவித்து வந்தனர். இதற்கு பின்னணியில் டிரம்ப் தான் உள்ளார் என்று அனைவரும் கூறி வந்தனர். மேலும் இதுபோல் பிரச்சனைகள் நிலவும் பொழுது முன்னாள் அதிபர் டிரம்ப் சர்ச்சைக்குரிய பல பதிவுகளை வெளியிட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல பிரச்சனைகள் நிலவி வந்த நிலையில் ஒரு வழியாக அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றுக்கொண்டார். பின்பு முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் பற்றிய தகவல் ஒன்றும் சில தினங்களாக வெளிவராத நிலையில் தற்போது அவரை பற்றிய ஓர் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

donald trump

தனுஷ், விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

அது என்னவென்றால் அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டிரம்ப் தற்போது தனக்கென்று சொந்தமாக சமூகவலைத்தளம் ஒன்றை துவங்க உள்ளாராம். இதற்காக அவர் பல குழுக்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த வலைத்தளம் தொடங்கினால் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படும் எனவும், பல பயனாளர்கள் இதனை பின்பற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here