‘காற்று மாசுபாடு மிக மோசமாக உள்ளது’ – இந்தியாவை கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!!

1

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் காற்றின் தரம் மிகக் குறைவாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சி வேட்பாளரான பிடனுடன் நடைபெற்ற இரண்டாவது நேரடி விவாதத்தின் போது டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்தார். நட்பு நாடான இந்தியாவை டிரம்ப் இவ்வாறு சாட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதிபர் தேர்தல்:

அமெரிக்காவில் இன்னும் சில நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தீவிர பிரச்சாரத்தில் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றை டிரம்ப் முறையாக கையாளவில்லை எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி என இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் டிரம்ப் மீண்டும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார். நேற்று எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளர் பிடனுடன் நேரடி விவாதத்த்தில் டிரம்ப் கலந்து கொண்டார். அதில், சீனா, ரஷ்யா, இந்தியாவைப் பாருங்கள்.. அந்த நாடுகளில் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது குறித்து பேசிய டிரம்ப், பாரிஸ் ஒப்பந்தம் லட்சக்கணக்கான வேலைகளை இழப்பதற்கும், ஆயிரக்கணக்கான நிறுவனங்களை மூடுவதற்கும் வழிவகுக்காது என்று கூறினார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்தியா, சீனா போன்ற நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான எந்த உதவியும் செய்யவில்லை என்று டிரம்ப் கூறினார். கார்பன் டை ஆக்சைடு வெளியிடும் நான்காவது பெரிய நாடு இந்தியா. 2017 ஆம் ஆண்டில், இந்திய கார்பன் உமிழ்வு 7% ஆக இருந்தது. இந்த விவாதத்தின் போது இந்தியாவில் காற்றின் தரம் குறித்து டிரம்ப் கூறிய கருத்துக்களுக்கு ட்விட்டரில் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here