யூத் கொண்டாடும் ஹீரோவான சிவகார்த்திகேயன் – டாக்டர் வெற்றியை பீட் பண்ணுமா டான்? முழு விமர்சனம் இதோ!!

0
யூத் கொண்டாடும் ஹீரோவான சிவகார்த்திகேயன் - டாக்டர் வெற்றியை பீட் பண்ணுமா டான்? முழு விமர்சனம் இதோ!!
யூத் கொண்டாடும் ஹீரோவான சிவகார்த்திகேயன் - டாக்டர் வெற்றியை பீட் பண்ணுமா டான்? முழு விமர்சனம் இதோ!!

சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இன்று (13-05-2022) ரிலீஸ் ஆகியுள்ள டான் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் காணலாம்.

டான் திரைவிமர்சனம்:

நடிகர் சிவகார்த்திகேயன் தனது டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. டாக்டர் படத்தில் செம சைலண்ட்டாக இருந்த சிவகார்த்திகேயன், இந்த படத்தில் அப்படியே செம ஜாலி டைபாக மாறியுள்ளார்.

தனது அப்பா சமுத்திரகனியின் டார்ச்சரால், இன்ஜினியரிங் படிப்பில் சேரும் சிவகார்த்திகேயன் வாழ்க்கையை சமாளித்து, எப்படி சாதிக்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தின் நாயகி பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனுக்கு சிறந்த ரொமான்டிக் ஹீரோயினாக சிக்சர் அடித்துள்ளார்.

படத்தில், சூரி, சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டோரின் காமெடி படத்தை பெரிய அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. கல்லூரியில் ஸ்ட்ரிக்ட்டான ஆசிரியர் பூமிநாதனாக உள்ளே வரும் எஸ் ஜே சூர்யா, கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட் சிவகார்த்திகேயன் இடையே ஏற்படும் மோதலை வைத்து மொத்த படமும் நகர்கிறது. இந்த படத்தை மாணவர்கள் கொண்டாடினாலும், ஒரு சில ஆசிரியர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி தன்னுடைய  பள்ளி கல்லூரி வாழ்க்கைகளில் தான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நினைத்தாரோ? அதை அப்படியே படமாக எடுத்துள்ளார். மொத்தத்தில், அப்பா, அம்மா, ஆசிரியர் கண்டிப்புக்கு பின்னால் மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது, இதை நம்பினால் வாழ்வில் முன்னேறலாம் என்பதைத்தான் இந்த படம் பேசியுள்ளது. மொத்தத்தில் படம் 5 க்கு 3 புள்ளிகளை பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here