இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை – 60 நாட்களுக்குப் பிறகு தொடக்கம்..!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த விமான சேவைகள் இன்று (மே 25) தொடங்கப்பட்டது. உள்நாட்டு விமானங்கள் 60 நாட்களுக்குப் பிறகு பயணிகளுடன் வானில் பறந்தன.

உள்நாட்டு விமான சேவை:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்துறைகள் முடங்கிப்போய் உள்ளன. அதிலும் முக்கியமாக விமான போக்குவரத்து அடிமட்டத்திற்கு சென்று விட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு முதல் முறையாக உள்நாட்டு விமான சேவையை தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சென்னை, லக்னோ, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் விமான சேவை தொடங்கப்பட்டது. சர்வதேச விமான சேவையை தொடங்குவதற்கு இது ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி பயணிகள் 2 மணிநேரத்திற்கு முன்னர் விமான நிலையம் வந்தனர். முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்திய பின்னர் அனைவரும் தெர்மல் ஸ்கிரீனிங் வழியே அனுமதிக்கபட்டனர். இதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் பலர் முகத்தை முழுவதும் மூடும் வகையில் பிளாஸ்டிக் மாஸ்க்கும் அணிந்து இருந்தனர்.

முதலாவதாக சென்னையில் இன்று டெல்லிக்கு இன்று காலை 6.35 மணிக்கு 111 பயணிகளுடன் இண்டிகோ விமானம் டெல்லி புறப்பட்டுச் சென்றது. இன்னும் பல முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here