யானையை விரட்டிய நாய் – முதலாளி குடும்பத்துக்கு காட்டிய விசுவாசம்!!!

0

கேரளா இடுக்கி மாவட்ட பகுதில அதிகமா காட்டு யானை நடமாட்டம் இருக்கும், இந்த காட்டு யானை தொல்லை தாங்காம அந்த பகுதி சேர்ந்த விவசாயி சோமன், இவரோட வீட்டை சுத்தி கம்பிவேலி கட்டிருக்காரு 2 நாள் முன்னாடி இவரோட வீட்டுக்கு காட்டுயானை வந்துருக்கு. அந்த கம்பி வேலியை தாண்ட முடியாத கடுப்புல ரொம்பவே கோவப்பட்ட யானை சோமன் வீட்டை நோக்கி போயிருக்கு. சோமன் ஒரு நாய் வளத்துருக்காரு. காட்டு யானை வரத பாத்த அந்த நாய் டோமி யானைய வீட்டுக்குள்ள வர விடாம தடுத்துருக்கு. ஏற்கனவே கோவமா இருந்த யானை நாய் தடுக்குறதுல இன்னும் கோவப்பட்டு அந்த டோமிய தூக்கி எரிஞ்சிடுச்சி. நாய் அலறல் கேட்ட சோமன் வீட்டுல இருக்குறவங்க வெளிய ஜன்னல் வழியா எட்டி பாத்துருக்காங்க. அப்போ இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துருக்கு. கீழே விழுந்தும் வீட்டுல இருக்கவங்களுக்கு எதுவும் ஆக கூடாதுனு மீண்டு அந்த நாய் எழுந்து போய் அந்த காட்டுயானையுடன் போராடி காட்டு யானையின் காலை கடிச்சிருக்கு, தொடர்ந்து அந்த யானையின் கண்களில் நாய் டோமி நகத்தால் கீறிருக்கு. தூங்கி கிடந்த யானை தூக்கி வீசி பந்தாடிருக்கு இந்த டோமியை. இவ்ளோ போராடுற நாயை எதிர் கொள்ள முடியாம யானை சோமன் வீட்டை விட்டு கிளம்பிப்போயிருக்கு யானை போனதும் சோமன் அவரு குடும்பத்தோடு வெளிய வந்து பாத்துருக்காங்க. அங்க வந்து பாத்தப்பா இவங்க ஆசையா வளர்த்த நாய் டோமிய யானை வயிற்றில் தாக்கியதால டோமி உயிர் இழந்திருக்கு. இத பார்த்து உயிரை காப்பாத்த நினைச்ச நாய நினைச்சு பெருமை படுறதா இல்ல நாய் உயிர் போனத நினைச்சு வறுத்த படுறதான்னு ரொம்பவே குழப்பத்துல மன உளைச்சல்ல இருக்காங்க சோமன் குடும்பம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here