காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு சுவாசப் பிரச்சனை., மருத்துவர்கள் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

0
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு சுவாசப் பிரச்சனை., மருத்துவர்கள் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு சுவாசப் பிரச்சனை., மருத்துவர்கள் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சோனியா காந்தி (வயது 76) உடல் நலக்குறைவால், சமீப காலமாக சிகிச்சைக்காக மருத்துவமனை சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென சுவாசப்பிரச்சனை ஏற்பட்டதால் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது சோனியா காந்தியின் மகனான ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்த செய்தி அறிந்த ராகுல், ஓய்வு நேரங்களில் தனது தாயாரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகிறார். இதையடுத்து சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தின் இந்த பகுதியில் இரவு நேர பேருந்து சேவையை அதிகரிக்க கோரிக்கை., அரசிடம் வேண்டுகோள்!!

அதாவது சோனியா காந்திக்கு முன்னதாக 2 முறை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளதால் சுவாச பாதையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது சீராக சுவாசித்து வருவதால் உள்நோயாளி பிரிவில் மாற்றப்பட்டுள்ளார். மேலும் கூடிய விரைவில் குணமாகி வழக்கமான கட்சி பணிகளை மேற்கொள்வார் என கங்காராம் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here