கொரோனாவிற்கு அதிக மருத்துவர்கள் உயிரிழந்த மாநிலம் – தமிழகம் முதலிடம்!!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய அளவில் கொரோனா தொற்றால் அதிக மருத்துவர்கள் உயிரிழந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது மக்களளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

கொரோனாவிற்கு பலியாகும் மருத்துவர்கள்:

உலக அளவில் கொரோனா தாக்கத்தால் இதுவரை பல லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழக அரசு தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. இதுவரை 2.60 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்று மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 175 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 43 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் மருத்துவரகளின் உயிரிழப்புகள் அதிகம். இதுவரை உயிரிழந்த மருத்துவர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம் – WHO எச்சரிக்கை!!

அறுவை சிகிச்சை மருத்துவர்கள் 4 பேர், குழந்தைகள் சிறப்பு மருத்துவர்கள் 4 பேரும் இதுவரை உயிரிழந்து உள்ளனர். தமிழகத்திற்கு அடுத்த படியாக மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும், குஜராத்தில் 20 மருத்துவர்களும், டெல்லியில் 12 மருத்துவர்களும் உயிரிழந்து உள்ளனர். மேலும் சில மாநிலங்களில் தலா ஒரு மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். கொரோனா பாதித்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உயிரிழப்பது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here