அப்பா 8 அடி பாஞ்சா.. நீங்க 16 அடி பாஞ்சுட்டீங்களே – யுவன் சங்கர் ராஜாவுக்கு கிடைத்த அங்கீகாரம்!

0
அப்பா 8 அடி பாஞ்சா.. நீங்க 16 அடி பாஞ்சுட்டீங்களே - யுவன் சங்கர் ராஜாவுக்கு கிடைத்த அங்கீகாரம்!
அப்பா 8 அடி பாஞ்சா.. நீங்க 16 அடி பாஞ்சுட்டீங்களே - யுவன் சங்கர் ராஜாவுக்கு கிடைத்த அங்கீகாரம்!

பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஆன யுவன் சங்கர் ராஜாவுக்கு சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா கல்லூரி டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

டாக்டர் பட்டம்:

தமிழ் சினிமாவில் இசைக்கு முன்னோடியாக இருக்கும் இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் தான் யுவன் சங்கர் ராஜா. கடந்த 1997-ல் தனது இசை பயணத்தை தொடங்கி 25 வருடங்களாக பல படங்களுக்கு இசை அமைத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன் சங்கர் ராஜா.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் வரிசையில் அவர் இசையமைத்த காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, நந்தா, ராம், பருத்திவீரன், பில்லா, மங்காத்தா வெற்றிப்படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவர் இசை அமைப்பது மட்டுமின்றி சில பாடல்கள் பாடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்றளவும் தமிழ் சினிமாவில் தலை சிறந்த இசையமைப்பாளராக வலம் வருகிறார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவை பெருமைப்படுத்தும் விதமாக சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா கல்லூரி டாக்டர் பட்டத்தை கொடுத்து கௌரவப்படுத்தி உள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தகவல் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here