பலரும் எதிர்பார்த்த சிவகார்திகேயனனின் டாக்டர் பட ட்ரைலர் நாளை வெளியாகயுள்ளது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஏற்கனவே OTTயில் வெளியிட படக்குழு முடிவு செய்து இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக படம் OTT தளங்களில் வெளியாகவில்லை.
இதை தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அக்டோபர் 9 ஆம் தேதி டாக்டர் திரையரங்குகளில் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்தார். ரொம்ப நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நாளை (24, செப்டம்பர் 2021) டாக்டர் படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. இப்படம் சிவாவின் எதிர்நீச்சல், கனா போன்று வெற்றியடையுமா? அல்லது வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் போன்று தோல்வியை தழுவுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்