‘டாக்டர்’ வெற்றியை கோலாகலமாக கொண்டாடிய படக்குழு – வைரலாகும் என்ஜாய்மென்ட் புகைப்படம்!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தை அந்த படக்குழு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடிய போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவான படம் டாக்டர். இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் வினய்யின் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தியேட்டரில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

காமெடி கலந்த ஃபேண்டசி படமாக இது உருவாகி உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். பல முன்னணி நடிகர்களின் படங்களை எல்லாம் இந்த படம் ஓவர்டேக் செய்துள்ளது. இந்த வெற்றி களிப்பை இந்த படத்தின் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்கள் படக்குழு என்று பதிவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here