
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்களை நூதன முறையில் பண மோசடி செய்து வருகின்றனர். இதை தடுக்க சைபர் கிரைம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், இது மாதிரியான மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது OTO மூலமாக பண மோசடி செய்து வருவதாக சில புகார்கள் எழுந்து வருகிறது. அதாவது பொதுவாக ஹாக்கர்ஸ் மற்றவர்களின் மொபைலை ஹேக் செய்ய ஒரு லிங்கை அனுப்பி ஹேக் செய்வார்கள்.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் தற்போது ஆர்டர் செய்யாத ஒரு பார்சலை கொண்டு வந்து கொடுக்கிறார்கள். ஆனால் அது நீங்கள் ஆர்டர் செய்யாத பொருளாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அதை கேன்சல் செய்ய விரும்புவீர்கள். அப்படி கேன்சல் செய்ய வேண்டுமானால் ஒரு OTP நம்பர் அனுப்புவோம், அதை சொல்ல வேண்டும் என்று கூறுவார்கள். அதன்படி நீங்கள் OTP நம்பரை கூறினால் உடனே உங்கள் மொபைல் போனை ஹேக் செய்து விடுவார்கள். அதுபோல OTP மோசடிகள் ஏராளம். எனவே நீங்கள் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.., பீதியில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!!!