தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கும் விழா – மே 7 காலை 9 மணிக்கு துவக்கம்!!

0

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிக அளவிலான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் வருகிற மே 7ம் தேதி பதவி ஏற்கவுள்ளார்.

தமிழக முதல்வர்:

தமிழகத்தில் நடப்பு மாதமான மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் மத்தியில் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ம் தேதி நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் திமுக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஆட்சியை பிடித்து அசத்தியது. இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா நினைவாலயத்தில் திமுக புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு மனதாக சட்டப்பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழக ஊரடங்கு எதிரொலி – பேருந்துகளில் இனி 50% பயணிகள் மட்டுமே அனுமதி!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனையடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை இன்று ஸ்டாலின் சந்தித்தார். பின்பு உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் வருகிற மே மாதம் காலை 9 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here