மீண்டும் உயிர் பலி ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்கள் – பொள்ளாச்சியில் ஆளும்கட்சியின் அதிகாரம்!!

0

பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள நெடுஞ்சாலைகளில் தற்போது பொறுப்பேற்று உள்ள தி.மு.க.,வினர் தங்களின் ஆளும்கட்சி அதிகாரத்தை காட்டும் படியாக பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

பொள்ளாச்சில் ஆளும் கட்சியின் அதிகாரம்:

பொள்ளாச்சி, உடுமலையில் கட்சி பேனர்கள், போஸ்டர்கள் ஓடும் கலாச்சாரம் இப்போது மறுபடியும் ஆரம்பம் ஆகியுள்ளது. அதாவது 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள ஆளும் கட்சி தி.மு.க.,வினர் தங்களின் பதவி மையங்கள் அனைத்தையும் காட்டும் வகையில் கட்சியின் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். உடுமலையில் அமைந்துள்ள சாலைகளின் ஓரங்களில் பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள் வைத்து தங்களின் ஆளுமை திறனை காட்டுகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி பொது இடங்களில் பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள் வைப்பதால், அதன் வழியாக செல்லும் போக்குவரத்து கனரக வாகனகள் மற்றும் வாகனகள் விபத்துக்குள்ளாவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவற்றை வைப்பதற்கு அரசு மற்றும் கோர்ட் உத்தரவுகள் நிறைய வழிமுறைகளை வைத்துள்ளது.

சென்னையில் நடந்த துயர சம்பவம்:

முன்னதாக சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில், 2019ல் பிளக்ஸ் பேனர் விழுந்த சம்பவத்தில் பைக்கில் வந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து நீதி மன்றங்கள் இது போன்ற ‘பிளக்ஸ் பேனர்கள்’ வைக்க தடை விதித்தது மட்டும் அல்லாமல் பல கட்டுபாடுகளையும் விதித்தது. இந்த அறிவிப்பை கேட்ட அ.தி.மு.க., தி.மு.க., உள்பட கட்சியினர் பலர் இது மாதிரியான ‘பிளக்ஸ் பேனர்கள் வைக்க மாட்டோம்,’ என உறுதியளித்தது.

ஆனால் இப்போது ஆட்சி அமைத்துள்ள தி.மு.க.,வினர், தங்கள் போட்டோக்களுடன் பிளக்ஸ் பேனர்கள் அடித்து அவைகளை மக்கள் பயன்படுத்தும் பஸ் ஸ்டாண்ட், அரசு கால்நடை மருத்துவமனையை மறைத்தும், 5 ரோடுகள் சந்திக்கும் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் வைத்து போக்குவரத்து மற்றும் பல ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைத்துள்ளனர்.

இந்நிலையில் விதிமீறி அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்களை அகற்ற வேண்டும் என்றும் சட்டத்தை மீறுவோர் மீது கட்சிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொள்ளாச்சியில் அமைத்துள்ள கோட்டூர் ரோடு மேம்பால தடுப்புச்சுவரில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அக்கட்சியினர் வேட்பாளர்கள் சுவர் விளம்பரம் செய்கின்றனர். அதை தொடர்ந்து அம்பராம்பாளையத்தில் பேனர் வைத்துள்ளனர். நீதி மன்றங்களின் விதிகளை மீறும் விதமாக காட்சிகள் தங்களின் பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்களை வைத்துள்ளனர். அதிகாரிகளும், அரசாங்கமும் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here