தீபாவளிக்கு என்ன ஸ்வீட் செய்றதுன்னு குழப்பமா? – வெறும் 4 பொருட்களை வைத்து சுலபமா செய்யலாம் இந்த டேஸ்ட்டி டிஷ்!!

0

இன்னும் சில நாட்களில் தீபாவளி வர உள்ளதால் நம் வீட்டில் அனைவரும் என்ன என்ன இனிப்புகள் செய்யலாம் என குழம்பி கொண்டிருப்போம். அதனால் இந்த பதிவில் வெறும் 4 பொருட்களை வைத்து சுவையான ஸ்வீட் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நெய் – 1 டிஸ்பூன்

பால் – 1/4 கப்

பால் பவுடர் – 1 கப்

அரைத்த சீனி – 1/2 கப்

செய்முறை:

முதலில் கடாயில் நெய் விட்டு பாலை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் பால் பவுடரை சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் பொடியாக்கிய சீனியை சேர்த்து கை விடாமல் நன்கு கிளறவும்.

4 முதல் 7 நிமிடங்கள் நன்றாக கிண்டி விட்டு அடுப்பை அணைத்து நெய் தடவிய தட்டில் அந்த கலவையை கொட்டவும். பின்னர் கையில் சிறிது நெய் தடவி குலாப்ஜாமுன் அளவுக்கு உருட்டி கொண்டு நடுவில் தட்டையாக வருமாறு தட்டி கொள்ளவும். தற்போது 10 நிமிடத்தில் மிக சுவையான ஸ்வீட் தயார்.

குறிப்பு: தேவைப்பட்டால் இந்த ஸ்வீட்டின் மேல் பிளம்ஸ், முந்திரி, பாதாம் போன்றவற்றை நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here