இந்தியாவில் களைகட்டும் தீபாவளி – ரூ.3.5 லட்சம் கோடிக்கு விற்பனை!! புதிய ரெகார்ட்!!
இந்தியாவில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.3.5 லட்சம் கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.
தீபாவளி விற்பனை:
உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தீபாவளி விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது. அந்த வகையில், தீபாவளியொட்டி ஜவுளி விற்பனை 12%மும், தங்க விற்பனை 9% மும் அதிகரித்துள்ளது. இது போக, உணவகங்கள், இனிப்பு கடைகள் என அனைத்திலும் இரவும் பகலுமாக விற்பனை களைகட்டியது.
TNPSC தேர்வுக்கு குறைவான கட்டணத்தில் பயிற்சி – உடனே சேரவும்!!
இதனால், இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கால விற்பனையில் மட்டுமே ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரித்த பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சீன பொருட்களின் விற்பனை சரிவடைந்துள்ளது. இதனால், சீனாவுக்கு ரூ.1 கோடி வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது.