தீபாவளிக்கு சொந்த ஊர் போக பிளான் பண்ணிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!!

0
தீபாவளிக்கு சொந்த ஊர் போக பிளான் பண்ணிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!!
தீபாவளிக்கு சொந்த ஊர் போக பிளான் பண்ணிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!!

பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஷாக் நியூஸ்:

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் சொந்த ஊர் செல்பவர்கள் ஏற்கனவே ரயில், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 30 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது.

இதன் மூலம் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில் பயணிகள் முன்கூட்டியே தங்கள் இருக்கையை முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 450 அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான முன்பதிவும் படு மும்முரமாக நடந்து வருகிறது.

இருப்பினும் ஏராளமான தென் மாவட்ட அரசு விரைவு பேருந்துகளில் இடங்கள் முடிந்துவிட்டன. அதாவது சென்னையில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, செங்கோட்டை, தென்காசி, திருச்சி மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு போக கூடிய அரசு பேருந்துகளில் இடங்கள் முழுவதும் நிரம்பி உள்ளது. இதையடுத்து பகல் நேர பேருந்துகளில் மட்டுமே இடங்கள் இருப்பதாகவும், கோயம்பேட்டில் இருந்து கிளம்பும் 250 அரசு விரைவு பேருந்துகளில் 22, 23 ஆகிய தேதிகளுக்கு இடங்கள் இல்லை என்றும் அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர்.

இதையடுத்து இரவு நேரத்தில் செல்லக்கூடிய எல்லா பேருந்துகளிலும் இடங்கள் நிரம்பி விட்டதாகவும், இந்த முன்பதிவு முடிந்தவுடன் பிற போக்குவரத்து கழக அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யப்படும் என்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here